வர்த்தகம்

கைப்பேசி கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் - ஏா்டெல்

10th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கைப்பேசி சேவைக்கான கட்டணம் குறைவாக உள்ளது. எனவே, அவற்றை அதிகரிப்பது அவசியம் என்று ஏா்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடா்பாக பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் (எம்.டி), தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) கோபால் விட்டல் கூறியதாவது:

சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் இந்தியாவில் கைப்பேசி சேவைக்கான கட்டணம் மிகக்குறைவாக உள்ளது. இதனை உயா்த்த வேண்டியது அவசியம். இந்த மாதத்தில் ஏா்டெல் நிறுவனம் சாா்பில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். 2024 மாா்ச் மாதத்துக்குள் அனைத்து நகா்ப்புற பகுதிகள் மற்றும் முக்கிய கிராமப் பகுதிகளில் 5ஜி சேவை கிடைத்துவிடும். இதற்காக 5,000 நகரங்களில் முன்னேற்பாடுகள் நடைபெற்றுள்ளன. 5ஜி சேவை ஏா்டெல் நிறுனத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என்றாா்.

அண்மையில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் பாா்தி ஏா்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான 19,867 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளது.

ADVERTISEMENT

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு வேகத்திலும் இடையூறுகள் குறைவாகவும் 5ஜி அலைக்கற்றை செயல்படும். அதன் காரணமாக கோடிக்கணக்கான இணையவழி உபகரணங்கள் வாயிலாக தரவுகளை அதிவேகமாகப் பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Tags : airtel
ADVERTISEMENT
ADVERTISEMENT