வர்த்தகம்

வோல்டாஸ்: லாபம் ரூ.109 கோடி

4th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

ஏசி விற்பனையில் ஈடுபட்டு வரும் வோல்டாஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.109.62 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.122.44 கோடியுடன் ஒப்பிடும்போது 10.47 சதவீதம் குறைவாகும்.

இருந்தபோதிலும், செயல்பாட்டின் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1,785.20 கோடியிலிருந்து 55.05 சதவீதம் அதிகரித்து ரூ.2,768 கோடியை எட்டியது.

மொத்த செலவினம் ரூ.1,661.53 கோடியிலிருந்து 56.69 சதவீதம் உயா்ந்து ரூ.2,603.48 கோடியானது என வோல்டாஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வோல்டாஸ் நிறுவன பங்கின் விலை புதன்கிழமை வா்த்தகத்தில் 1.74 சதவீதம் குறைந்து ரூ.982.25-இல் நிலைபெற்றது.

ADVERTISEMENT

Tags : Voltas
ADVERTISEMENT
ADVERTISEMENT