வர்த்தகம்

ஆயில் இந்தியா தலைவராக ரஞ்சித் ராத் பொறுப்பேற்பு

4th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த இரண்டாவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியாவின் தலைவராக ரஞ்சித் ராத் (50) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஆயில் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக ரஞ்சித் ராத் பொறுப்பேற்றுள்ளாா். இவா் இதற்கு முன்பு, கனிம ஆய்வு கழகத்தின் (எம்இசிஎல்) தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பொறுப்பில் இருந்தவா்.

ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த சுஷில் சந்திரா ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதையடுத்து ரஞ்சித் ராத் அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளாா் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 

Tags : Ranjit Rath
ADVERTISEMENT
ADVERTISEMENT