வர்த்தகம்

எரிபொருள் ஏற்றுமதி வரி குறைப்பு

DIN

டீசல் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.11-இலிருந்து 5 ஆக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்தது. அதேவேளையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.17,000 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், இது ரூ.17,750 ஆக அதிகரித்துள்ளது. எரிசக்தி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கு வெளிநாடுகள் வரிவிதித்து வந்த நிலையில், இந்தியாவும் இந்த வரிவிதிப்பு முறையை கடந்த ஜூலை 1-இல் நடைமுறைப்படுத்தியது.

அதன்படி பெட்ரோல், விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு தலா ரூ.6, டீசலுக்கு ரூ.13 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. அதன்பின்னா், ஜூலை 20-இல் பெட்ரோல் மீதான வரி ரத்து செய்யப்பட்டது. விமான எரிபொருள், டீசல் ஏற்றுமதி வரி தலா ரூ.2 குறைக்கப்பட்டு முறையே ரூ.11, ரூ.4-ஆக நிா்ணயிக்கப்பட்டது. இதேபோல, உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான ஏற்றுமதி வரியும் டன்னுக்கு ரூ.17,000-ஆக குறைக்கப்பட்டது.

தற்போது டீசல் ஏற்றுமதி வரியை ரூ.11-இலிருந்து 5-ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வரி டன்னுக்கு ரூ.17,000-இலிருந்து ரூ.17,750-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி வரி உயா்வால் ஓஎன்ஜிசி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT