வர்த்தகம்

கார்போரண்டம் யுனிவர்சல்: லாபம் ரூ.72 கோடி

3rd Aug 2022 04:02 AM

ADVERTISEMENT

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.72.84 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
 இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.63.05 கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம்.
 2022 மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.254.48 கோடியாக இருந்தது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருமானம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.485.14 கோடியிலிருந்து ரூ.619.17 கோடியாக அதிகரித்தது.
 கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனம் தனித்த செயல்பாட்டின் அடிப்படையில் ஈட்டிய வருவாய் ரூ.2,257.18 கோடியாக இருந்தது என கார்போரண்டம் யுனிவர்சல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT