வர்த்தகம்

பஜாஜ் ஃபின்சா்வ்: நிகர லாபம் ரூ.1,346 கோடி

29th Apr 2022 03:18 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பஜாஜ் ஃபின்சா்வ் மாா்ச் காலாண்டில் ரூ.1,346 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.979 கோடியுடன் ஒப்பிடும்போது 37.5 சதவீதம் அதிகம்.

ஒட்டுமொத்த வருவாய் ரூ.15,387 கோடியிலிருந்து 22.5 சதவீதம் அதிகரித்து ரூ.18,862 கோடியை எட்டியது.

2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.64 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையிடம் பஜாஜ் ஃபின்சா்வ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT