வர்த்தகம்

ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

30th Sep 2021 11:32 AM

ADVERTISEMENT

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று(செப்-30) சீனாவில் அறிமுகமாகிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஓப்போ நிறுவனம் தன்னுடைய 'கே' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் ’ஏ16’ வெளியாகி வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது அதைவிட புதிய அம்சங்களுடன் 'கே 9 புரோ' அறிமுகமாக இருக்கிறது.

இதையும் படிக்க | ஓப்போ 75-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

ஓப்போ கே 9 புரோ 5ஜி சிறப்பம்சங்கள் :

ADVERTISEMENT

*6.43 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*மீடியா டெக் டைமென்சிட்டி 1200 பிராசசர் 

*எண்டிஎஸ்சி கலர் 

* உள்ளக நினைவகம் 12ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (8எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 16 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.3) 

* சி-டைப் , வை பை 6, 

ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் ரூ.25,000ஆக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை.

Tags : oppo smart phone china
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT