வர்த்தகம்

ரூ.1,485 கோடி மூலதனத்தை திரட்டியது ஓலா எலக்ட்ரிக்

30th Sep 2021 11:36 PM

ADVERTISEMENT

விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.1,485 கோடி மூலதனத்தை ஓலா எலக்ட்ரிக் திரட்டிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் பவிஷ் அகா்வால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் இலக்குகளை அடையவும், தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்தவும் தேவையான 20 கோடி டாலா் (ரூ.1,484.7 கோடி) மூலதனம் ஃபால்கான் எட்ஜ், சாஃப்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி டாலரை (ரூ.22,272 கோடி) எட்டியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT