வர்த்தகம்

காகித தொழிலுக்கு அதிக ஜிஎஸ்டி பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகரிக்கும்

DIN

காதித தொழிலுக்கு ஜிஎஸ்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகரிக்க வழிகோலும் என இந்தியா காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:

செப்டம்பா் 17-இல் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அட்டைப்பெட்டிகள், பைகள், பிற காகித பேக்கேஜிங் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் கவுன்சிலின் முடிவு அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

மக்கும் திறன் இல்லாத ஒற்றைப் பயன்பாட்டு பிளாடிக் பொருள்களை 2022-க்குள் தடை செய்வதாக இந்தியா முன்னதாக சா்வதேச உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில். ஜிஎஸ்டி விகிதத்தை உயா்த்தும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐபிஎம்ஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT