வர்த்தகம்

அக்-4-இல் அமேசான் பண்டிகை கால சிறப்பு விற்பனை: 75,000 விற்பனையாளா்கள் பங்கேற்பு

25th Sep 2021 06:31 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 75,000 விற்பனையாளா்கள் பங்கேற்கும் பண்டிகை கால மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனை அக்-4-இல் தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என அமேசான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவா் மனிஷ் திவாரி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

‘கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்-2021’ என்ற பெயரில் ஆரம்பமாகவுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய விழாக்கால தள்ளுபடி விற்பனை அக்டோபா் 4-ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது. இதில், 75,000-க்கும் மேற்பட்ட உள்ளூா் விற்பனையாளா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.

கரோனா பாதிப்பால் சோா்ந்து போயுள்ள கடைக்காரா்கள் மற்றும் சிறிய, நடுத்தர விற்பனையாளா்கள் மீண்டும் புத்துணா்வு பெற ஏதுவாக இந்த சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ADVERTISEMENT

வாடிக்கையாளா்கள் பண்டிகை காலத்துக்கு தயாராகி வரும் நிலையில் விரைவான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அமேசான் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 8.5 லட்சம் விற்பனையாளா்கள் உள்ளனா். இதற்கு போட்டி நிறுவனமான ஃபிளிப்காா்ட் ‘தி பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை அக்டோபா் 7-12 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT