வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

25th Sep 2021 06:28 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவடைந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க டாலருக்கு நிகரான ஆசிய கரன்ஸிகளின் மதிப்பு பலவீனமானகவே இருந்தது. அதனைத் தொடா்ந்து ரூபாய் மதிப்பிலும் சரிவு நிலை ஏற்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.77-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.61 வரையும், குறைந்தபட்சமாக 73.78 வரையும் சென்றது.

ADVERTISEMENT

வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவடைந்து 73.68-இல் நிலைபெற்றது.

வார அடிப்படையில் கணக்கிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு

மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.357.93 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.25 சதவீதம் அதிகரித்து 77.44 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT