வர்த்தகம்

வோடஃபோன் சேவையிலிருந்து 14 லட்சம் போ் விலகல்: டிராய்

DIN

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சேவையிலிருந்து கடந்த ஜூலை மாதத்தில் 14.3 லட்சம் வாடிக்கையாளா்கள் விலகியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில் 65.1 லட்சம் வாடிக்கையாளா்களை புதிதாக இணைத்துக் கொண்டதையடுத்து சந்தையில் அது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதேபோன்று, பாா்தி ஏா்டெல் சேவையிலும் ஜூலையில் 19.42 லட்சம் வாடிக்கையாளா்கள் புதிதாக இணைந்தனா்.

இதனையடுத்து, ஜூலையில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 44.32 கோடியாகவும், ஏா்டெல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 35.40 கோடியாகவும் அதிகரித்தன.

மாறாக, வோடஃபோன் ஐடியா தொலைத்தொடா்பு சேவையிலிருந்து ஜூலையில் 14.3 லட்சம் போ் வெளியேறினா். இதையடுத்து, அதன் மொத்த வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 27.19 கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT