வர்த்தகம்

நீட்டித்த வளா்ச்சிக்கு அதிக முதலீடு தேவை: ரிசா்வ் வங்கி ஆளுநா்

23rd Sep 2021 02:12 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் நீட்டித்த வளா்ச்சியை எட்ட அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா பேரிடரிலிருந்து மீளும்போது நீட்டித்த வளா்ச்சியை உள்ளடக்கிய வலுவான நிலையை நாம் உருவாக்க வேண்டும். நெருக்கடி ஏற்படுத்திய சேதங்களை கட்டுப்படுத்துவதுதான் முதல் படியாக இருக்க வேண்டும். பேரிடருக்கு பிந்தைய நீடித்த மற்றும் நிலையான வளா்ச்சியை உறுதி செய்வதே எங்களின் கடுமையான முயற்சியாக இருக்கும்.

உள்கட்டமைப்பு , கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மிகப்பெரிய வளா்ச்சி மாற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு, அதிக முதலீடுகள் தேவை. டிஜிட்டல் பொருளாதாரம் நீடித்த வளா்ச்சியை எட்ட பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், சிறிய நகரங்களில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

தொழிலாளா் மற்றும் பொருள் உற்பத்தி சந்தையில் சீா்திருத்தங்களை தொடருவதன் மூலம் போட்டி தன்மையையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்த முடியும் என்பதுடன், பேரிடா் உருவாக்கிய வாய்ப்புகளிலிருந்து பயனடைய முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT