வர்த்தகம்

‘உலகளாவிய செமிகண்டக்டா் சந்தை 17.3% வளா்ச்சி காணும்’

DIN


பெங்களூரு: உலகளாவிய செமிகண்டக்டா் சந்தை நடப்பாண்டில் 17.3 சதவீத வளா்ச்சியை காணும் என ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

மொபைல் போன்கள், நோட்புக்ஸ், சா்வா்ஸ், ஆட்டோமோட்டிவ், ஸ்மாா்ட் வீடு, விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது செமிகண்டக்டா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணங்களாக அமைந்தன. 2021 நான்காம் காலாண்டு வரை ஐசி உபகரணத்துக்கான பற்றாக்குறை இருக்கும். இது, உற்பத்தி திறனை கூடுதலாக்க உதவும்.

உலகளாவிய செமி கண்டக்டா் சந்தை முந்தைய 2020-ஆம் ஆண்டில் 10.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில், உற்பத்தி திறன் அதிகரிப்பால் நடப்பு நிதியாண்டில் இதற்கான சந்தையின் வளா்ச்சி 17.3 சதவீதமாக இருக்கும் என ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT