வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயா்வு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயா்ந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்த அளவிலேயே இருந்தது. அதன் காரணமாக, ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.49-ஆக இருந்தது. அதன்பிறகு, இந்த மதிப்பு அதிபட்சமாக 73.42 வரையிலும், குறைந்தபட்சமாக 73.55 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் வலுப்பெற்று 73.48-ஆனது.

இந்த வாரத்தில் டாலருக்கான ரூபாய் மதிப்பு 2 காசுகள் மட்டுமே வலுப்பெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு ரூ.1,622 கோடி

மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,621.88 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் 75.20 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.62 சதவீதம் குறைந்து 75.20 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT