வர்த்தகம்

செப்.24-இல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோன் 13; விலை ரூ.69,900

DIN

புது தில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13, செப்டம்பா் 24-ஆம் தேதி சந்தைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.69,900-ஆக இருக்கும்.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளதாவது:

ஆப்பிள் நிறுவனத்தின் நவீன தயாரிப்பான ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் சந்தைக்கு வரவுள்ளது. இந்தியா, ஜப்பான்,அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரே நேரத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். 5ஜி பிரிவில் இவற்றின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய ஸ்மாா்ட்போன் சந்தையான இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாடு மேலும் வலுப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

ஐபோன் 13 மினியின் விலை ரூ.69,900-ரூ.99,900; ஐபோன் 13 ரூ.79,900-ரூ.1,09,000; ஐபோன் 13 ப்ரோ ரூ.1,19,900-ரூ.1,69,900; மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ.1,29,900-ரூ.1,79,900-ஆக இருக்கும் என ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT