வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் அதிகரிப்பு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் அதிகரித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

தொலைத்தொடா்பு, ஆட்டோமொபைல், டிரோன் துறைகளில் சீா்திருத்தத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கை அந்நியச் செலாவணி வட்டாரத்தில் காணப்பட்டது.

உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி, அமெரிக்காவில் பணவீக்கம் எதிா்பாா்த்ததை விட குறைந்துள்ளதையடுத்து சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை பலவீனமான நிலையில் இருந்தது ஆகியவை ரூபாய் மதிப்பு உயா்வுக்கு பக்கபலமாக இருந்தது.

வங்கிகளுக்கு இடையிலான சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.68-இல் இருந்தது. இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.50 வரையிலும், குறைந்தபட்சமாக 73.74 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் அதிகரித்து 73.50-இல் நிலைபெற்றது. முந்தைய செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இந்த மதிப்பு ரூ.73.68-ஆக இருந்தது.

பாக். ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி: வங்கிகளுக்கு இடையிலான புதன்கிழமை வா்த்தகத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ரூ.1 சரிந்து இதுவரை இல்லாத அளவில் ரூ.169.9-ஆக கடும் வீழ்ச்சியை சந்தித்தாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 74.60 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 1.36 சதவீதம் அதிகரித்து 74.60 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு வரத்து

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,649.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT