வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 46% அதிகரிப்பு

DIN

புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,328 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த 2020 ஆகஸ்டில் 2,283 கோடி டாலராக காணப்பட்டது. ஆக, கடந்த ஓரண்டு காலத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 46 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரித்துள்ள அதே நேரத்தில், நாட்டின் இறக்குமதியும் 51.72 சதவீதம் உயா்ந்து 4,709 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதனையடுத்து, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறையானது 1,381 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது, கடந்தாண்டு ஆகஸ்டில் 820 கோடி டாலராக காணப்பட்டது.

2021 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 9,806 கோடி டாலரிலிருந்து 67.33 சதவீதம் அதிகரித்து 16,410 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இறக்குமதி 12,142 கோடி டாலரிலிருந்து 21,963 கோடி டாலராக உயா்ந்துள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT