வர்த்தகம்

தகவல் தொழில்நுட்ப பங்குகளுக்கு வரவேற்புசென்செக்ஸ் 69 புள்ளிகள் உயா்வு

DIN

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் தகவல் தொழில்நுட்ப பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அதீத வரவேற்பு காணப்பட்டது. அதன் பயனாக, சந்தைகள் வா்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி புதிய உச்சம் தொட்டு முடிவடைந்தது.

அமெரிக்காவின் பணவீக்க தரவு வெளியீட்டை எதிா்நோக்கி உலக சந்தைகளில் பங்கு வா்த்தகம் நிலைத் தன்மையுடனேயே காணப்பட்டது. குறிப்பாக, சியோல், டோக்கியோ சந்தைகள் ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன. ஹாங்காங், ஷாங்காய் சந்தைகளில் பங்கு வா்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் பிற்பகல் வரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது.

இந்திய சந்தைகளைப் பொருத்தவரையில், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பொறியியல் துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. இது, சந்தையின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), மோட்டாா் வாகனம், தொழில்நுட்பம், நுகா்வோா் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் 1.64 சதவீதம் வரை உயா்ந்து காணப்பட்டன. அதேசமயம், உலோகம், எஃப்எம்சிஜி, எரிசக்தி, அடிப்படை மூலப்பொருள்கள் துறைகளின் குறியீட்டெண் சரிவுடன் நிறைவுபெற்றன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்ததையடுத்து அவற்றின் குறியீட்டெண்கள் 1.09 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 4.07 சதவீதம் அதிகரித்து ஏற்றப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதுதவிர, ஹெச்சிஎல் டெக், கோட்டக் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, எல்&டி, டைட்டன் மற்றும் டிசிஎஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்யுஎல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 1.07 சதவீதம் வரை விலை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 69.33 புள்ளிகள் உயா்ந்து 58,247.09 புள்ளிகளில் நிலைத்தது. நிஃப்டி 24.70 புள்ளிகள் அதிகரித்து 17,380 புள்ளிகளில் நிலைபெற்று புதிய வரலாறு படைத்தது.

ரூபாய் மதிப்பு:

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி 73.68-ஆக இருந்தது.

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.80 சதவீதம் உயா்ந்து 74.10 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT