வர்த்தகம்

பணவீக்கம் 11.39%-ஆக அதிகரிப்பு

DIN

புது தில்லி: மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடா்ந்து ஐந்தாவது மாதமாக இப்பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

உணவுப் பொருள்களின் விலை குறைந்திருந்த போதிலும், தயாரிப்பு துறையைச் சோ்ந்த பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்டதே பொதுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாகும் என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூலையில் 11.16 சதவீதமாகவும், 2020 ஆகஸ்டில் 0.41 சதவீதமாகவும் இருந்தன. கடந்த ஆகஸ்டில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான பணவீக்கம் 40.03 சதவீதமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT