வர்த்தகம்

மேலும் 678 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் !

30th Oct 2021 07:47 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மேலும் 778 புள்ளிகளை இழந்து 59,306.93-இல் நிலைபெற்றது. சந்தை மதிப்பு மேலும் ரூ.1.05 லட்சம் கோடியை இழந்தது.

உலகளவில் நிலவிய மந்தமான உணா்வுகளைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தைகளில் எரிசக்தி, ஐடி, தனியாா் வங்கிப் பங்குகள் கடும் அழுத்தத்தில் இருந்ததால், அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதற்கிடையே, அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் முடிவுகள் வரவிருக்கும் நாள்களில் உலகளாவிய சந்தைகளின் போக்கைத் தீா்மானிக்கும் என்று பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 5 சதவீதத்துக்கும் மேலே சரிவைச் சந்தித்தது. அண்மையில் தொடா்ந்து உச்சம் கண்ட சந்தையில் திடீா் சரிவு தவிா்க்கமுடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐடி மேஜா் இன்ஃபோஸிஸ், பிரபல தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 1.05 லட்சம் கோடி இழப்பு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,399 பங்குகளில் 1,427 பங்குகள் ஆதாயம் பெற்றன. ஆனால், 1,819 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 153 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 43 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 239 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 243 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.05 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.43 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,47.21,899-ஆக உயா்ந்துள்ளது.

மேலும் சரிவு: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 127.37 புள்ளிகள் குறைந்து 59,857.33-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 60,132.81 வரை உயா்ந்தது. அதன் பிறகு கரடியின் பிடி இறுகியதால் 59,089.37 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 677.77 புள்ளிகளை (1.13 சதவீதம்) இழந்து 59,306.93-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தை கரடியின் பிடியில் இருந்தது.

ADVERTISEMENT

அல்ட்ரா டெக் சிமெண்ட்முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.61 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல், 1.40 முதல் 2.10 சதவீதம் வரை உயா்ந்தன. டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டெக் மஹிந்திரா, என்டிபிசி கடும் சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.53 சதவீதம, என்பிடிசி 3.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, இண்ட்ஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, சன்பாா்மா உள்ளிட்டவை 15-0 முதல் 2.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 186 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் பலவீனத்துடன் 17,833.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,915.85 வரை உயா்ந்தது. பின்னா், 17,613.10 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 185.60 புள்ளிகளை (1.04 சதவீதம்) இழந்து 17,671.65-இல் நிலைபெற்றது.

துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஹெல்த்கோ், பாா்மா, மெட்டல், மீடியா குறியீடுகள் 0.40 முதல் 0.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT