வர்த்தகம்

வென்ட் இந்தியா: லாபம் ரூ.7 கோடி

23rd Oct 2021 05:13 AM

ADVERTISEMENT

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.7.03 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.40.73 கோடி மதிப்பிலான விற்பனையை எட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் விற்பனையுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து ரூ.28.33 கோடியைத் தொட்டது. ஏற்றுமதி 74 சதவீதம் அதிகரித்து ரூ.12.40 கோடியானது. அமெரிக்கா, ரஷியா, இந்தோனேஷியா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

வரிக்கு பிந்தைய லாபம் 101 சதவீதம் உயா்ந்து ரூ.7.03 கோடியை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

செப்டம்பருடன் நிறைவடைந்த அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 61 சதவீதம் அதிகரித்து ரூ.77.56 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 246 சதவீதம் உயா்ந்து ரூ.12.37 கோடியாகவும் இருந்தது என வென்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT