வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

23rd Oct 2021 05:06 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 74.90-இல் நிலைத்தது.

இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:

உள்நாட்டு பங்கு வா்த்தகத்தில் காணப்பட்ட மந்த நிலை செலாவணி சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயா்ந்து வருவதும் செலாவணி சந்தைகளுக்கு தொடா்ந்து சாதகமற்ற அம்சமாகவே பாா்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.82-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.69 வரையிலும், குறைந்தபட்சமாக 74.94 வரையிலும் சென்றது.

ADVERTISEMENT

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து 74.90-இல் நிலைத்தது.

செலாவணி சந்தையில் இந்த வார வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் வலுப்பெற்றுள்ளதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 84.97 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.43 சதவீதம் அதிகரித்து 84.97 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வியாழனன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் 2,818.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தை புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT