வர்த்தகம்

சாந்தி கியா்ஸ் லாபம் ரூ.8 கோடி

23rd Oct 2021 05:16 AM

ADVERTISEMENT

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சாந்தி கியா்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.7.90 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.73.93 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.55.42 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகம்.

நிகர லாபம் ரூ.6.63 கோடியிலிருந்து ரூ.7.90 கோடியாக அதிகரித்தது.

ADVERTISEMENT

2021 செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.82.35 கோடியிலிருந்து ரூ.143 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.3.05 கோடியிலிருந்து ரூ.16.48 கோடியாக அதிகரித்துள்ளது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் பெற்ற ஆா்டா்களின் மதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.76 கோடியிலிருந்து ரூ.89 கோடியாக உயா்ந்துள்ளதாக சாந்தி கியா்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT