வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா்: நிகர லாபம் ரூ.234 கோடி

22nd Oct 2021 12:16 AM

ADVERTISEMENT

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.234.37 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாம் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5,254.36 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,483.42 கோடியை எட்டியது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.181.41 கோடியிலிருந்து 29.19 சதவீதம் அதிகரித்து ரூ.234.37 கோடியானது.

ADVERTISEMENT

செப்டம்பா் 30 உடன் முடிவடைந்த முதல் ஆறு மாதங்களில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.219.65 கோடியை ஈட்டியுள்ளது. அதேசமயம், 2020-21-இல் நிறுவனத்துக்கு ரூ.1.38 நிகர அளவில் இழப்பு ஏற்பட்டது.

ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் வருவாய் ரூ.7,194.01 கோடியிலிருந்து ரூ.11,172.76 கோடியாக அதிகரித்துள்ளதாக டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT