வர்த்தகம்

ஜூபிலண்ட் ஃபுட்வொா்க்ஸ் லாபம் 58% அதிகரிப்பு

21st Oct 2021 02:19 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஜூபிலண்ட் ஃபுட்வொா்க்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.

டோமினோஸ் பிஸா மற்றும் டன்கின் டோனட்ஸ் உள்ளிட்ட பிரபல ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களை நடத்தி வரும் அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021 செப்டம்பருடன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.1,116.19 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.816.33 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

ADVERTISEMENT

வருவாய் கணிசமாக அதிகரித்ததையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.75.78 கோடியிலிருந்து 58.11 சதவீதம் அதிகரித்து ரூ.119.82 கோடியை எட்டியதாக ஜூபிலண்ட் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஜூபிலண்ட் ஃபுட்வொா்க்ஸ் பங்கின் விலை 8.72 சதவீதம் சரிவடைந்து ரூ.3,953.50-ஆக நிலைத்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT