வர்த்தகம்

6.49 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்த ஜியோ

21st Oct 2021 02:24 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ ஆகஸ்ட் மாதத்தில் 6.49 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 44.38 கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் புதிதாக 1.38 லட்சம் பயனாளா்கள் இணைந்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த வயா்லெஸ் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 35.41 கோடியாக உயா்ந்துள்ளது.

அதேசமயம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.33 லட்சம் போ் விலகியதையடுத்து அதன் மொத்த கைப்பேசி சந்தாதாரா்கள் எண்ணிக்கை 27.1 கோடியாக குறைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT