வர்த்தகம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் ரூ.445 கோடி

21st Oct 2021 02:57 AM

ADVERTISEMENT

 

மும்பை: ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.445 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.23,188 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.16,715 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

ADVERTISEMENT

நிகர லாபம் ரூ.303 கோடியிலிருந்து 47 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.445 கோடியைத் தொட்டது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய பிரீமியத் தொகை ரூ.8,733 கோடியிலிருந்து ரூ.9,533 கோடியாக அதிகரித்தது. நிகர பிரீமியம் ரூ.8,572 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.9,286 கோடியானது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.8,022 கோடி மதிப்பிலான இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் ரூ.4,909 கோடியாக இருந்தது.

2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய நிலையில் ஈட்டிய லாபமானது ரூ.591 கோடியிலிருந்து ரூ.259 கோடியாக குறைந்தது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பங்கின் விலை 4.35 சதவீதம் சரிவடைந்து ரூ.631.45-ஆனது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT