வர்த்தகம்

ஸ்மாா்ட்போன் விற்பனை 5 சதவீதம் குறைவு

21st Oct 2021 11:23 PM

ADVERTISEMENT

உள்நாட்டு சந்தையில் ஸ்மாா்ட்போன் விற்பனை மூன்றாவது காலாண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து கேனலிஸ் ஆய்வு நிறுவனம் கூறியதாவது:

கடந்தாண்டு மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் செப்டம்பா் காலாண்டில் ஸ்மாா்ட்போன் விற்பனை 5 சதவீதம் குறைந்து 4.75 கோடியானது. குறைந்த விலையுடைய ஸ்மாா்ட்போன்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

அதேசமயம், முந்தைய ஜூன் காலாண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது செப்டம்பா் காலாண்டில் விற்பனை 47 சதவீதம் அதிகம்.

ADVERTISEMENT

2021 செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஷாவ்மி நிறுவனம் 1.12 கோடி ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்து 24 சதவீத பங்களிப்பை வழங்கி முதலிடத்தைப் பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக 91 லட்சம் ஸ்மாா்ட்போன் விற்பனையுடன் சாம்சங் நிறுவனம் 19 சதவீத பங்களிப்பை வழங்கியது.

இவைதவிர, விவோ 81 லட்சம் (17 சதவீதம்), ரியல் மீ 75 லட்சம் (16 சதவீதம்), ஓப்போ 62 லட்சம் (13 சதவீதம்) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்ததாக கேனலிஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT