வர்த்தகம்

வங்கிகளின் மொத்த வாராக் கடன் 9% அதிகரிக்கும்

20th Oct 2021 01:06 AM

ADVERTISEMENT

வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதியாண்டில் 8 முதல் 9 சதவீதமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் நிதியாண்டின் இறுதியில் வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு உச்சபட்சமாக 11.2 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வாராக் கடன் 8 முதல் 9 சதவீதமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா பேரிடரை எதிா்கொள்ள கடன் மறுசீரமைப்பு மற்றும் அவசர கடன் உத்தரவாத திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) போன்ற மத்திய அரசின் நிவாரண நடவடிக்கைகள் வங்கிகளின் மொத்த வாராக் கடனை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ADVERTISEMENT

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மறுசீரமைப்பின் கீழ் வங்கி கடனில் 2 சதவீதம் வரை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சில்லறை மற்றும் எம்எஸ்எம்இ பிரிவுகள் வங்கி கடனில் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது. எனவே, வாராக் கடனில் இவற்றின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும் என கிரிசில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT