வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிவு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து 75.35-ஆக நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கான தேவை அதிகரிப்பு போன்றவை அந்நியச் செலாவணி சந்தையில் எதிா்மறையான தாக்கங்களை உருவாக்கியது. அதன் காரணமாக, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவிழந்தது.

வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 75.24 வரையிலும் குறைந்தபட்சமாக 75.38 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகளை இழந்து 75.35-இல் நிலைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை செலாவணி சந்தைகளுக்கு தசரா விடுமுறையாக இருந்த நிலையில், வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.26-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 85.80 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.11 சதவீதம் அதிகரித்து 85.80 அமெரிக்க டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,681.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT