வர்த்தகம்

மைண்ட்ரீ லாபம் 57% உயா்வு

DIN

மைண்ட்ரீ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான தெபஷிஸ் சாட்டா்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.2,586.2 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,926 கோடியுடன் ஒப்பிடும்போது 34.27 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.253.7 கோடியிலிருந்து 57.2 சதவீதம் அதிகரித்து ரூ.398.9 கோடியாக இருந்தது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாயில் வட அமெரிக்காவின் பங்களிப்பு 72.8 சதவீதமாகவும், ஐரோப்பாவின் பங்கு 8.7 சதவீதமாகவும், பிரிட்டன் மற்றும் அயா்லாந்து பங்களிப்பு 10.9 சதவீதமாகவும், ஏபிஏசி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 7.6 சதவீதமாகவும் இருந்தன.

இரண்டாவது காலாண்டில் 4,400 போ் பணிக்கு சோ்ந்ததையடுத்து, மொத்த பணியாளா் எண்ணிக்கை 29,700-ஆக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT