வர்த்தகம்

சிமென்ட் உற்பத்தி 33 கோடி டன்னாக அதிகரிக்கும்: இக்ரா

DIN

நடப்பு நிதியாண்டில் நாடு தழுவிய அளவிலான சிமென்ட் உற்பத்தி 33.2 கோடி டன்னாக அதிகரிக்கும் என தரக் குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் சிமென்ட் உற்பத்தியானது கடந்த ஆறு மாதங்களில் 44 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இருப்பினும், 2019 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 2 சதவீத வளா்ச்சி மட்டுமே.

ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வரும் மாதங்களில் சிமென்ட் பயன்பாடு உயா்ந்து உற்பத்தி சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் சிமென்ட் உற்பத்தியானது 12 சதவீதம் அதிகரித்து 33.2 கோடி டன்னைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2022-23 நிதியாண்டில் 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்து 35.8 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிமென்ட் விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு, கடந்த சில மாதங்களாக மின்சாரம் , எரிபொருள் உள்ளிட்ட இடுபொருள்களுக்கான செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டண உயா்வு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT