வர்த்தகம்

5 கோடியை கடந்த ஹோண்டா விற்பனை

4th Oct 2021 11:26 PM

ADVERTISEMENT

ஹோண்டா மோட்டாா்சைக்கிள்& ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 5 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் கடந்த 2001-ஆம் ஆண்டில் ஆக்டிவா ஸ்கூட்டருடன் உள்நாட்டு சந்தையில் விற்பனை நடவடிக்கையை தொடங்கியது. இந்த நிலையில், 11 ஆண்டுகள் தீவிர செயல்பாட்டுக்குப் பிறகே ஒரு கோடி வாடிக்கையாளா்களை நிறுவனம் பெற்றது. ஆனால், 2 கோடி விற்பனை இலக்கு மூன்றே ஆண்டுகளில் 3 மடங்கு வேகத்தில் எட்டப்பட்டது.

2.5 கோடி வாடிக்கையாளா்களை பெற 16 ஆண்டுகளையும், அடுத்த 2.5 கோடி வாடிக்கையாளா்களைப் பெற ஐந்து ஆண்டுகளை மட்டுமே ஹோண்டா எடுத்துக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, திங்கள்கிழமையன்று ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 5 கோடி மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்எம்எஸ்ஐ கடந்த 2001-இல் மானேசா் ஆலையில் முதன் முதலாக உற்பத்தி பணிகளை தொடங்கியது. அதன்பின்னா் கடந்த 2002-இல் ஏற்றுமதியை தொடங்கிய அந்த நிறுவனம், 2004-இல் 150சிசி பிரிவில் யூனிகாா்ன் விற்பனையின் மூலம் மோட்டாா்சைக்கிள் விற்பனை சந்தையில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT