வர்த்தகம்

‘விமான நிலையக் கட்டமைப்புத் துறை வருவாய் ரூ.3,250 கோடியாக உயரும்’

DIN

கடந்த ஆண்டு இழப்பைச் சந்தித்த இந்தி விமான நிலைய உள்கட்டமைப்புத் துறையின் செயல்பாட்டு வருவாய் இந்த ஆண்டில் ரூ.3,250 கோடியாக உயரும் என்று சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நடப்பாண்டின் விமானப் போக்குவரத்து 82 முதல் 84 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்புத் துறையின் செயல்பாட்டு வருவாய் ரூ. 3,250 கோடியாக உயரும் நிலை உள்ளது.

கரோனா நெருக்கடி முக்கிய விமான நிலையங்களில் தற்போதைய விரிவாக்கத் திட்டங்கள் 12-18 மாதங்கள் தாமதமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசி திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சரிவு, சுற்றுலாப் பயணங்களின் மறு எழுச்சி ஆகியவை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டுள்ளன.

கரோனா நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று, விமான நிலைய உள்கட்டமைப்புத் துறையாகும்.

2022-ஆம் நிதியாண்டில் இந்தத் துறையின் செயல்பாட்டு வருமானம் மற்றும் செயல்பாட்டு லாபம் முறையே ரூ. 14,000 கோடி மற்றும் ரூ. 3,250 கோடியாக இருக்கும். இது, 2021-ஆம் நிதியாண்டில் ரூ. 1,450 கோடி செயல்பாட்டு இழப்பாக இருந்தது.

நாட்டில் இரண்டாவது கரோனா அலை காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அது கடந்த ஐந்து மாதங்களாக தொடா்ந்து ஏற்றத்தைக் கண்டு வருகிறது.

கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளா்த்துவது, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவது, சுற்றுலாப் பயணங்கள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த ஜூன்-அக்டோபா் மாத காலகட்டத்தில் உள்நாட்டுப் பயணிகளின் போக்குவரத்து 17.3 சதவீத வளா்ச்சியை எட்டியது.

2023-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் 2024-ஆம் நிதியாண்டில் சா்வதேச விமானப் போக்குவரத்தும் கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது எனறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT