வர்த்தகம்

கடும் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி!

24th Nov 2021 12:58 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் தடை குறித்து மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில் அதன் சந்தை மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கிரிப்டோகரன்சி எனப்படும் ’விர்சுவல் வணிகம்’ உலகம் முழுவதும் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த கரன்சிகள் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் பெரிய அளவில் அறிமுகமாகி அதிக முதலீடுகளைப் பெறத் தொடங்கியது.

இதையும் படிக்க | கிரிப்டோகரன்சிகளுக்கு தடை; முழு பின்னணி என்ன?

நாட்டில் 1.5 கோடி பேர் பல நாணயங்களிலும் பிட்காயின் போன்றவற்றிலும் கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் வரும் நவ.29 அன்று பிரதமர் மோடி கிரிப்டோகரன்சிகள் மீதான தடைகுறித்த மசோதாவைத் தாக்கல் செய்யும் நிலையில் கிரிப்டோகரன்சி பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று இரவு அறிவிப்பு வந்ததும் 15 சதவீதம் வரை பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. 

பலரும் பதற்த்தில் கடுமையான நஷ்டத்திலேயே தங்கள் முதலீடுகளை விற்ற நிலையில் 48 லட்சம் வரை விற்ற பிட்காயின் விலை ஒரே நாளில் 33 லட்சம் வரை கீழ் இறங்கி தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதேபோல ஒவ்வொரு கிரிப்டோகரன்சிகளின் விலையும் முன் எப்போதும் இல்லாத சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்தியாவில் கிரிப்டோ வணிகத்தை ஒருங்கிணைக்கும் செயலிகள் தங்களுடைய முதலீட்டாளர்களிடம்  யாரும் பதற்றத்தில் முதலீடுகளை விற்க வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT