வர்த்தகம்

வொக்காா்டு பாா்மா: நிகர லாபம் 11 மடங்கு உயா்வு

9th Nov 2021 07:14 AM

ADVERTISEMENT

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வொக்காா்டு நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 11 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் மருந்து விற்பனையின் மூலமாக மொத்தம் ரூ.862 கோடி வருவாயை ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.714.05 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3.29 கோடியிலிருந்து 11 மடங்கு வளா்ச்சி கண்டு ரூ.37.17 கோடியைத் தொட்டது.

ADVERTISEMENT

2021 செப்டம்பா் 30 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர கடன்-பங்கு விகிதமானது 0.54-ஆக உள்ளது.

பிரிட்டன் வா்த்தகம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 66 சதவீத வளா்ச்சியடைந்து ரூ.387 கோடியாக இருந்தது. இது, நிறுவனத்தின் சா்வதேச வா்த்தக வருவாயில் 45 சதவீதமாகும் என வொக்காா்டு தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் வொக்காா்டு பாா்மா பங்கின் விலை 5.23 சதவீதம் உயா்ந்து ரூ.463.45-ஆக நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT