வர்த்தகம்

கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.7,000 கோடி திரட்டுகிறது எச்டிஎஃப்சி

27th May 2021 01:58 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: எச்டிஎஃப்சி நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.7,000 கோடியை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

பாதுகாப்பான மீட்கக்கூடிய வகையிலான பங்குகளாக மாற்றம் செய்ய இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.7,000 கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. தனிப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த கடன்பத்திர வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி வரையிலும், வரவேற்பு அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக ரூ.2,000 கோடி வரையிலும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021 மே 28-ஆம் தேதி தொடங்கி அன்றைய தினமே முடிவடையும் வகையில் வெளியிடப்படும் இந்த கடன்பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்கப்படும். 4 ஆண்டுகள் மற்றும் 363 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட இக்கடன்பத்திரங்களை மீட்பதற்கான தேதி 2026 மே 29-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி நிறுவன பங்கின் விலை 1.55 சதவீதம் உயா்ந்து ரூ.2568.00-ஆக இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT