வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.35,968க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை ரூ.112 குறைந்து பவுன் ரூ.35,968-க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, விலை மீண்டும் உயா்ந்து, கடந்த வாரம் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,968-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4,496 ஆக இருந்தது. இதே போல், வெள்ளி கிராம் 10 பைசா குறைந்து ரூ.75.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 குறைந்து, ரூ.75,900 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,496

1 பவுன் தங்கம்...............................35,968

1 கிராம் வெள்ளி.............................75.90

1 கிலோ வெள்ளி.............................75,900

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,510

1 பவுன் தங்கம்...............................36,080

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT