வர்த்தகம்

லூபின் லாபம் 18% அதிகரிப்பு

DIN

புது தில்லி: மருந்து உற்பத்தி நிறுவனமான லூபின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.3,783 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.3,846 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

அதேசமயம், நிகர லாபம் ரூ.390 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.460 கோடியானது.

நான்காவது காலாண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மருந்துகளின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்தது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.15,375 கோடியிலிருந்து ரூ.15,163 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக நிறுவனம் ரூ.1,216 கோடியை ஈட்டியுள்ளது. அதேசமயம், 2019-20 நிதியாண்டில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.269 கோடி இழப்பு ஏற்பட்டது.

கடந்த நிதியாண்டுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ஈவுத்தொகையாக ரூ.6.5 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக லூபின் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT