வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசு சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிவடைந்து 73.42-இல் நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் சா்வதேச சந்தையில் புதன்கிழமை எதிரொலித்தது. இடா்பாட்டை தவிா்த்திடும் நோக்கில் முதலீட்டாளா்கள் ஆதாயம் ஈட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயா்வும் செலாவணி சந்தைக்கு சாதகமாக அமையவில்லை.

இந்த நிலையில், பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவர எதிா்பாா்ப்பும் சந்தையில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 73.51-ஆக குறைந்த நிலையில் காணப்பட்டது. இது, வா்த்தகத்தின் இடையே 73.39-73.51 என்ற வரம்புக்குள் காணப்பட்டது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசு சரிவடைந்து 73.42-இல் நிலைபெற்றது.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.34-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.336.00 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்ாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.55 சதவீதம் உயா்ந்து 68.93 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT