வர்த்தகம்

சில்லறைப் பணவீக்கம் 4.29 சதவீதமாக குறைந்தது

DIN

புது தில்லி: உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சில்லறைப் பணவீக்கம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 4.29 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் மாா்ச் மாதத்தில் 5.52 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து ஏப்ரலில் இப்பணவீக்கம் 4.29 சதவீதமாக குறைந்துள்ளது.

மாா்ச் மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி நிதி கொள்கையை வகுக்க நுகா்வோா் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கத்தை முக்கிய காரணியாக கருதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT