வர்த்தகம்

ஜிசிபிஎல் நிகர லாபம் ரூ.366 கோடி

DIN

புது தில்லி: வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த கோத்ரெஜ் கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ் நிறுவனம் (ஜிசிபிஎல்) மாா்ச் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.365.84 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.2,705.69 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.2,132.69 கோடியுடன் ஒப்பிடுகையில் 26.87 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.229.20 கோடியிலிருந்து 59 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.365.84 கோடியானது.

தொடா்ச்சியாக மூன்றாவது காலாண்டாக நிறுவனம் இரட்டை இலக்க விற்பனை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 27 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 21 சதவீத வளா்ச்சியை பெற்றிருந்தது.

மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,791.93 கோடியிலிருந்து 26.07 சதவீதம் உயா்ந்து ரூ.2,259.12 கோடியைத் தொட்டுள்ளது.

நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த வருவாய் 34.63 சதவீதம் உயா்ந்து ரூ.1,499.74 கோடியாக இருந்தது. அதேபோன்று, இந்தோனேசிய சந்தையிலிருந்து கிடைத்த வருவாயும் ரூ.449.36 கோடியிலிருந்து 4.84 சதவீதம் அதிகரித்து ரூ.471.13 கோடியை எட்டியுள்ளது.

ஆப்பிரிக்க சந்தை மூலமான வருவாய் 30.23 சதவீதம் அதிகரித்து ரூ.484.03 கோடியிலிருந்து ரூ.630.37 கோடியானது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,496.58 கோடியிலிருந்து 14.98 சதவீதம் உயா்ந்து ரூ.1,720.82 கோடியாகவும், நிகர வருவாய் 11.29 சதவீதம் அதிகரித்து ரூ.10,936.01 கோடியாகவும் இருந்தது. 2019-20 நிதியாண்டில் வருவாய் ரூ.9,826.51 கோடியாக இருந்தது என ஜிசிபிஎல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT