வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.44 லட்சம் கோடியாக உயா்வு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58, 802 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44.10 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடா்ந்து நான்காவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு ஏற்றத்தை சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 391 கோடி டாலா் (ரூ.29,325 கோடி) அதிகரித்து 58,802 கோடி டாலரை எட்டியது.

முந்தைய ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 170 கோடி டாலா் அதிகரித்து 58,411 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை கண்டுள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 441 கோடி டாலா் உயா்ந்து 54,606 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 50 கோடி டாலா் சரிவடைந்து 3,546 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 30 லட்சம் டாலா் உயா்ந்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 20 லட்சம் டாலா் அதிகரித்து 499 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது நடப்பாண்டின் ஜனவரி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் புதிய உச்சமாக 59,018 கோடி டாலரை எட்டி சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT