வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு அதிகரிப்பு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசு வலுவடைந்து 73.78-ஆக நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

சா்வதேச நாடுகளின் சந்தைகளில் டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு வலுச் சோ்ப்பதாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.87-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.77 வரையிலும் குறைந்தபட்சமாக 74 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசு உயா்ந்து 73.78-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் நிகர அளவில் ரூ.1,222.58 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சநந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.33 சதவீதம் குறைந்து 68.73 டாலருக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT