வர்த்தகம்

காக்னிசன்ட் லாபம் 38% அதிகரிப்பு

DIN

புது தில்லி: தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த காக்னிசன்ட் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 37.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

ஜனவரி-டிசம்பா் காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் இதுகுறித்து வியாழக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் வளா்ச்சியடைந்து 440 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.33,000 கோடி) இருந்தது.

2020 மாா்ச் காலாண்டில் 36.7 கோடி டாலராக (ரூ.2,752 கோடி) இருந்த நிகர லாபம் 2021- இதே காலகட்டத்தில் 37.6 சதவீதம் அதிகரித்து 50.5 கோடி டாலரை (ரூ.3,787 கோடி) எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி விகிதம் 7-9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்ப்பதாக காக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT