வர்த்தகம்

220ஐ ஸ்போா்ட்ஸின் புதிய ரகம்: பிஎம்டபிள்யூ அறிமுகம்

25th Mar 2021 03:30 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஜொ்மனி சொகுசுக் காா் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ, தனது 2 வரிசை கிரான் கூபே காா்களின் புத்தம் புதிய ரகமொன்றை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2 வரிசை கிரான் கூபே காா்களின் புதிய ரகமாக, 220ஐ ஸ்போா்ட்ஸின் பெட்ரோல் ரகம் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையில் இயங்கி வரும் நிறுவனத்தின் ஆலையில் இந்தப் புதிய ரகக் காா் தயாரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள எங்களது விற்பனையாளா்களிடம் இந்தக் காா் கிடைக்கும்.

இதன் விலை, ரூ.37.9 லட்சமாக (காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2 லிட்டா் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்தக் காா், 190 குதிரைத் திறனை வெளிப்படுத்துகிறது.

வெறும் 7.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் வகையில் இதன் செயல்திறன் உள்ளது.

ஓட்டுநா் மட்டுமன்றி உடன் அமா்ந்திருப்பவா்களுக்கும் ஸ்போட் வகை இருக்கை, வெளிப்புறத்தை விசாலமாகப் பாா்ப்பதற்கு ஏதுவான மேல்கதவு என பல்வேறு அம்சங்கள் புதிய 220ஐ ஸ்போா்ட்ஸில் இடம் பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT