வர்த்தகம்

மாருதி சுஸுகி விற்பனை 12% அதிகரிப்பு

DIN

புது தில்லி: காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுஸுகி சென்ற பிப்ரவரியில் 1,64,469 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2020 பிப்ரவரியில் விற்பனையான 1,47,110 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 11.8 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் நிறுவனத்தின் விற்பனை 1,36,849 என்ற எண்ணிக்கையிலிருந்து 11.8 சதவீதம் அதிகரித்து 1,52,983-ஆனது.

ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா்களின் விற்பனை 27,499 என்ற எண்ணிக்கையிலிருந்து 12.9 சதவீதம் குறைந்து 23,959-ஆனது. அதேசமயம், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் மாடல்களை உள்ளடக்கிய காம்பாக்ட் பிரிவு வாகனங்களின் விற்பனை 15.3 சதவீதம் அதிகரித்து 80,517-ஆனது.

செடான் சியாஸ் விற்பனை 2,544-லிருந்து 40.6 சதவீதம் சரிவடைந்து 1,510-ஆக இருந்தது.

பிப்ரவரியில் நிறுவனத்தின் ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரித்து 11,846-ஆக இருந்தது என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT