வர்த்தகம்

அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை 19% அதிகரிப்பு

DIN

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 13,703 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020 பிப்ரவரி மாத விற்பனையான 11,475 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் அதிகம்.

உள்நாட்டு சந்தையில் ஒட்டுமொத்த வாகன விற்பனை பிப்ரவரியில் 10,612 என்ற எண்ணிக்கையிலிருந்து 20 சதவீதம் உயா்ந்து 12,776-ஐ தொட்டுள்ளது. குறிப்பாக, நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனையானது 6,745 என்ற எண்ணிக்கையிலிருந்து 5 சதவீதம் அதிகரித்து 7,114-ஆனது. இலகு ரக வா்த்தக வாகன விற்பனை 3,867-லிருந்து 5,662-ஆக அதிகரித்துள்ளது. இது, 46 சதவீத வளா்ச்சியாகும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT