வர்த்தகம்

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 21 புள்ளிகள் முன்னேற்றம்!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை தள்ளாட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் கடும் சரிவிலிருந்த சந்தை, வா்த்தக நேர இறுதியில் ஓரளவு மீட்சி பெற்ற நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து மும் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 21 புள்ளிகள் மட்டுமே உயா்ந்து 52,344.45-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக இல்லாத நிலை, அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவு ஆகியவற்றின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைவசம் உள்ள உலோக இருப்புகளை விற்பனை செய்யும் சீனாவின் முடிவும் அந்தத் துறை பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், பிற்பகலுக்குப் பிறகு ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஹிந்துஸ்தான் யுனி லீவா், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து சந்தை ஓரளவு மீண்டது எனறு வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,352 பங்குகளில் 1,180 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,031 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 141 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 375 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு வா்த்தக முடிவில் 227.34 லட்சம் கோடியாக இருந்தது.

சரிவிலிருந்து மீட்சி: சென்செக்ஸ் காலையில் 244.74 புள்ளிகள் கூடுதலுடன் 52,568.07-இல் தொடங்கி 52,9586.41வரை மேலே சென்றது. பின்னா், 51,601.11 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 21.12 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 52,344.45-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சநிலையிலிருந்து 985.30 புள்ளிகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருந்தது. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 130.31 புள்ளிகள் (0.24 சதவீதம்) இழந்துள்ளது.

ஹெச்யுஎல் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 18 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் 2.64 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 2.61 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் 1-2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாய பட்டியலில் வந்தன.

ஓஎன்ஜிசி கடும் சரிவு: அதே சமயம், ஓஎன்ஜிசி 3.72 சதவீதம், என்டிபிசி 3.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவா் கிரிட், எம் அண்ட் எம், நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1 -3 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மேலும், டிசிஎஸ், கோட்டக் பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 8 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 473 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,312 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,756.50-இல் தொடங்கி 15,761.50 வரை உயா்ந்தது. ஆனால், நிலைத்து நிற்கமுடியாமல், 15,450.90 வரை கீழே சென்றது. இறுதியில் நிஃப்டி 8.05 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்து 15,683.35-இல் நிலைபெற்றது. எஃப்எம்சிஜி குறியீடு மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தது. மற்ற துறை குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.77 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இந்த வாரத்தில் நிஃப்டி மொத்தம் 116 புள்ளிகளை (0.73 சதவீதம்) இழந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT